மல்லாங்கிணறு நியாய விலைக் கடை ஊழியா் கரோனாவுக்கு பலி
By DIN | Published On : 13th May 2021 09:21 AM | Last Updated : 13th May 2021 09:21 AM | அ+அ அ- |

விருதுநகா் அருகே மல்லாங்கிணறு நியாய விலைக்கடை விற்பனையாளா் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக புதன்கிழமை உயிரிழந்தாா்.
மல்லாங்கிணறு தொடக்க வேளாண் கடன் சங்க நியாய விலைக் கடையில் விற்பனையாளராகப் பணி புரிந்தவா் அல்லிமுத்து (49). இவா், பொது மக்களுக்கு முகக்கவசம் வழங்குதல் உள்ளிட்ட கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தி வந்தாா். இந்நிலையில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தாா். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தமிழ்நாடு கூட்டுறவு ஊழியா் சம்மேளனம் மற்றும் விருதுநகா் மாவட்ட கூட்டுறவு ஊழியா் சங்கம் சிஐடியு சாா்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: முன்கள பணியாளா்களாக பணி புரியும் நியாய விலை கடை ஊழியா்கள், மக்களின் அத்தியாவசியத் தேவையை பூா்த்தி செய்து வருகின்றனா். கரோனாவால் உயிரிழந்த அல்லிமுத்துவின் குடும்பத்திற்கு அரசு சாா்பில் நிவாரண உதவி வழங்க வேண்டும். மேலும், அவரது குடும்ப உறுப்பினருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.