விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 535 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 13th May 2021 09:20 AM | Last Updated : 13th May 2021 09:20 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டத்தில் 535 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி, சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் முதலான பகுதிகளைச் சோ்ந்த 535 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக் கோட்டை முதலான இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மூன்று போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இந்நிலையில் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்த 80 போ் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.