அருப்புக்கோட்டை ஸ்ரீசீரடிசாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 13th May 2021 07:57 PM | Last Updated : 13th May 2021 07:57 PM | அ+அ அ- |

சிறப்பு வழிபாட்டிற்குற்குப் பின்னர் முழு அலங்காரத்தில் காட்சியளித்த பாபா.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி நகர் ஸ்ரீசீரடிசாய்பாபா கோவிலில் வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ஊழியர்கள் மட்டும் பங்கேற்ற நிலையில், பக்தர்கள் அனுமதியின்றி எளிமையாக நடைபெற்றது.
ஸ்ரீசீரடிசாய்பாபா கோவில்களில் வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வாடிக்கை. அப்போது விரதமிருந்து வரும் பக்தர்கள் உள்பட பலரும் பல்வேறு வித வண்ண வண்ணப் பூக்கள், மாலைகள், பழங்கள், உணவுப்பண்டங்களை பாபாவிற்குப் படைத்து வழிபடுவது வழக்கம்.
இவ்வித பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்பர். ஆனால் தற்போதைய நோய்த்தொற்றுச் சூழலில் வழிபாடுகளில் கலந்துகொள்ள பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் எளிய முறையில் கோவில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்ற நிலையில் வழிபாடு நடைபெற்றது. அப்போது பாபா வழிபாட்டுப்பாடல் ஒலிபெருக்கியில் பாடிட, வழக்கமான தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன.
குறிப்பாக மாலைநேர வழிபாடு முடிந்ததும், பாபா உற்சவர் சிலை பல்லக்கில் மலரலங்காரத்துடன் வைக்கப்பட்டு கோவில் வெளிப்பிரகாரத்தில் கிரிவல நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்றனர்.