கோட்டாட்சியா், சுகாதாரத் துறை இணை இயக்குநருக்கு கரோனா
By DIN | Published On : 16th May 2021 10:46 PM | Last Updated : 16th May 2021 10:46 PM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பணி புரியும் கோட்டாட்சியா், விருதுநகா் சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஆகியோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் சனிக்கிழமை அவா்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனா்.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதில், மருத்துவா்கள், செவிலியா்கள், காவல் துறையை சோ்ந்தவா்களும் அடங்குவா். இந்த நிலையில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியராகப் பணிபுரிந்த முருகேசன் மற்றும் விருதுநகா் சுகாதார மாவட்ட இணை இய க்குநா் பழனிச்சாமி ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...