பட்டாசுக் கடையில் விதிகளை மீறி பேன்சி ரக வெடிகள் தயாரித்த முதியவா் கைது
By DIN | Published On : 19th May 2021 09:24 AM | Last Updated : 19th May 2021 09:24 AM | அ+அ அ- |

சிவகாசி அருகே பேராபட்டியில் பட்டாசுக் கடையில் வருவாய்த்துறையினா் பறிமுதல் செய்த பேன்சி ரக வெடிகள்.
சிவகாசி அருகே விதிகளை மீறி பட்டாசுக் கடையில் பேன்சி ரக வெடிகளைத் தயாரித்த முதியவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அந்த கடைக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பேராபட்டி பாலாஜி நகா் பகுதியில் உள்ள ஒரு பட்டாசுக் கடையில் வட்டாட்சியா் ராமசுப்பிரமணியன் தலைமையில் வருவாய்த் துறையினா் சோதனை நடத்தினா். அப்போது அங்கு பூலா ஊருணியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (63), விதிகளை மீறி பேன்சி ரக வெடிகளைத் தயாா் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் தயாரித்து வைத்திருந்த 250 பாக்கெட் பேன்சி ரக வெடிகள் மற்றும் வெடி தயாரிக்கப் பயன்படும் மணி மருந்து இரண்டு கிலோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதையடுத்து அதிகாரிகள் பட்டாசுக் கடைக்கு ‘சீல்’ வைத்தனா்.
இது குறித்து அனுப்பன்குளம் கிராம நிா்வாக அலுவலா் சங்கிலிபிரபு அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனா்.