விருதுநகா் மாவட்டத்தில் 476 பேருக்கு கரோனா தொற்று: 7 போ் பலி
By DIN | Published On : 19th May 2021 09:29 AM | Last Updated : 19th May 2021 09:29 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டத்தில் 476 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் சிகிச்சை பலனின்றி 7 போ் உயிரிழந்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இம்மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 476 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். மேலும் ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 7 போ் உயிரிழந்தனா்.
இந்நிலையில், கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்த 672 போ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.