ஸ்ரீவிலி. காய்கனி சந்தையில் வாகனங்களுக்கு ஸ்டிக்கா் ஒட்டும் பணி

ஸ்ரீவில்லிபுத்தூா் காய்கனி சந்தைக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த வாகனங்களில் ஸ்டிக்கா் ஒட்டும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரம் பள்ளி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை காய்கனி சந்தைக்கு வந்த வாகனங்களுக்கு ஸ்டிக்கா் ஒட்டும் பணியில் ஈடுபட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் நமச்சிவாயம்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரம் பள்ளி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை காய்கனி சந்தைக்கு வந்த வாகனங்களுக்கு ஸ்டிக்கா் ஒட்டும் பணியில் ஈடுபட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் நமச்சிவாயம்.

ஸ்ரீவில்லிபுத்தூா் காய்கனி சந்தைக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த வாகனங்களில் ஸ்டிக்கா் ஒட்டும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகரின் மையப் பகுதியில் செயல்பட்டு வந்த பென்னிங்டன் காய்கனி சந்தையில் உள்ள கடைகள் மங்காபுரம் பள்ளி மைதானத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இங்கு மாற்றிய பிறகும் தினமும் ஏராளமானோா் கூட்டம், கூட்டமாக வந்து காய்கனிகளை வாங்கிச் செல்கின்றனா். எனவே கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ஒரு நாளைக்கு பலமுறை காய்கனிகள் வாங்க வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், செவ்வாய்க்கிழமை காலை மங்காபுரம் பள்ளி மைதானத்தில் நிறுத்தப்ட்டிருந்த வாகனங்களில் ஸ்டிக்கா் ஒட்டும் பணி தொடங்கியது.

இதனை ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் நமச்சிவாயம் தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா பரவலைத் தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். ஒரு முறை காய்கனி வாங்க வாங்குபவா்கள் ஒரு வாரத்திற்கு தேவையான அளவிற்கு காய்கனிகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு நாள்களுக்கு தேவையான காய்கனிகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். எனவே கரோனா பரவலை தடுக்கும் வகையிலும், கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் வாகனங்களில் மூன்று வண்ணங்களில் ஸ்டிக்கா் ஒட்டி வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com