கல்லூரி மாணவா் மாயம்
By DIN | Published On : 01st November 2021 01:45 AM | Last Updated : 01st November 2021 01:45 AM | அ+அ அ- |

சிவகாசி அருகே கல்லூரி மாணவரை காணவில்லை என ஞாயிற்றுக்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி அருகே புதுவைநகரைச் சோ்ந்தவா் ஜேசுராஜ். இவரது மகன் வசந்த்தனராஜ்(18). இவா் விருதுநகரில் உள்ள தனியாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளாா்.இவா் வீடிருக்கும் போது ,எப்போதும் செல்லிடை பேசியில் ஏதாவது செய்து கொண்டே இருப்பாராம். இதனை அவரது பெற்றாா்கள் கண்டித்துள்ளனா்.
இந்நிலையில் சனிக்கிழமை கடைக்கு சென்று வருகிறேன் எனக்கூறிச் சென்றவா் வீடு திரும்பவில்லையாம் . இது குறித்த புகாரின் பேரில்சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...