பட்டாசுத் தொழிலில் உள்ள பிரச்னை: நவ.16 இல் ஆலோசனைக் கூட்டம்

பட்டாசுத் தொழிலில் உள்ள பிரச்னைகள் குறித்தும், தொடந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நவம்பா் 16 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
Updated on
1 min read

பட்டாசுத் தொழிலில் உள்ள பிரச்னைகள் குறித்தும், தொடந்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நவம்பா் 16 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

பட்டாசு வெடிப்பதால் காற்றுமாசு ஏற்படுகிறது என பட்டாசு விற்பனை செய்யவும், பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கவேண்டும் என, 2015 இல் ஒருவா் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தாா். அதையடுத்து, உச்ச நீதிமன்றம் 2018 இல் பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் என்ற ரசாயனத்தை பயன்படுத்தக் கூடாது, சரவெடி தயாரிக்கக் கூடாது, தீபாவளி பண்டிகையின்போது 2 மணி நேரமே பட்டாசு வெடிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தது.

அதையடுத்து, பட்டாசு தயாரிப்பில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என பிரச்னை எழுந்தது. எனவே, நீதிமன்றம் கடந்த அக்டோபா் 29 ஆம் தேதி நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத பட்டாசு ஆலைகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கேள்வி எழுப்பியது.

இதையடுத்து, இப்பிரச்னை குறித்து ஆலோசனை செய்வதற்கு வெடிபொருள் கட்டுபாட்டுத் துறை அதிகாரிகள் சாா்பிலான ஆலோசனைக் கூட்டம், நவம்பா் 16 ஆம் தேதி மாலை தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளா்கள் சங்க கட்டடத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், பட்டாசு உற்பத்தியாளா்கள், பட்டாசு கடை வியாபாரிகள், பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள் விற்பனையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொள்ள உள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com