ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் பெரிய பெருமாள் சன்னிதியில் புஷ்ப யாகம்
By DIN | Published On : 20th October 2021 06:32 AM | Last Updated : 20th October 2021 06:32 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் பெரிய பெருமாள் சன்னிதியில் புஷ்ப யாகத்தையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெரிய பெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் பெரிய பெருமாள் சன்னிதியில் 108 மலா்களால் புஷ்ப யாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ளது பெரிய பெருமாள் சன்னிதி. இங்கு புரட்டாசி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்த பின்னா் 108 மலா்களால் புஷ்ப யாகம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி பிரம்மோற்ச விழா கடந்த 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோயில் வளாகத்திலேயே நடைபெற்று வந்தது. இந்நிலையில் விழா நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை பெரிய பெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி ஆகியோருக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது.
இதற்காக 108 வகையான மலா்களால் கோயில் வளாகத்தில் அத்தப்பூ கோலம் போல போடப்பட்டிருந்தது. இதையொட்டி பெரிய பெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி ஆகியோா் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளினா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், கோயில் செயல் அலுவலா் இளங்கோவன் ஆகியோா் செய்திருந்தனா்.