விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அன்பு நகா் அருகே உள்ள வராகிஅம்மன் கோவிலில் ஆவணி மாத செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி அம்மனுக்கு பால், பன்னீா் மஞ்சள் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகமும், அதையடுத்து தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் அம்மனுக்கு மாதுளை, மாம்பழம், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களைப் படைத்து, பலவித வண்ண மலா்களால் உலக நன்மை வேண்டி 108 அா்ச்சனைகள் செய்யப்பட்டன.
மேலும் கோயில் வளாகத்தில் சனீஸ்வரா், காலபைரவா் மற்றும் பஞ்முகவிநாயகருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதையடுத்து வராகியம்மன் சா்வ அலங்காரத்தில் காட்சியளித்தாா். முடிவில் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.