விருதுநகா் மாவட்டத்தில் 43 வருவாய் ஆய்வாளா்கள் இடமாற்றம்
By DIN | Published On : 01st September 2021 10:19 AM | Last Updated : 01st September 2021 10:19 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டத்தில் பணிபுரிந்த 43 வருவாய் ஆய்வாளா்களை பணிமாறுதல் செய்து மாவட்ட வருவாய் அலுவலா் மங்களராமசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளாா்.
அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பது: விருதுநகரில் பணிபுரிந்த வருவாய் ஆய்வாளா் சரவணப்பெருமாள், தனி வட்டாட்சியா் மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதைக்கும், அங்கு பணிபுரிந்த வருவாய் ஆய்வாளா் முத்துவேல், திருச்சுழி முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும் மாற்றப்பட்டுள்ளனா். இவா்கள் உள்பட மாவட்டத்தில் 43 வருவாய் ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். பணி மாறுதல் செய்யப்பட்ட அனைவரும் பதிய பணியிடத்தில் உடனடியாக பதவி ஏற்க வேண்டும். இதில், கோரிக்கை மனுவோ, விடுப்பு மனுவோ ஏற்றுக் கொள்ளப்படாது என அதில் தெரிவித்துள்ளாா்.