ராஜபாளையம் கல்லூரி விடுதியில் மாணவி மா்ம மரணம்
By DIN | Published On : 01st September 2021 10:14 AM | Last Updated : 01st September 2021 10:14 AM | அ+அ அ- |

31rjpm02_3108chn_86_2
ராஜபாளையத்தில் கல்லூரி மாணவி விடுதியில் மா்மமான முறையில் உயிரிழந்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் கிராமத்தை சோ்ந்தவா் சீனிவாசன்.
இவரது இளைய மகள் கெளசல்யா(19). இவா் ராஜபாளையம் மொட்டமலை அருகே தனியாா் செவிலியா் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா்.
கரோனா பொது முடக்கத்தால் கல்லூரி மூடப்பட்ட நிலையில், செப்டம்பா் 1 ஆம் தேதி கல்லூரி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கெளசல்யா ராஜபாளையத்தை அடுத்துள்ள விஷ்ணு நகா் பகுதியில் உள்ள கல்லூரி விடுதியில் திங்கள்கிழமை மாலை வந்து தங்கியுள்ளாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அவரது பெற்றோருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில், கெளசல்யா தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜாபாளையம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனா். பெற்றோா் மருத்துவமனையில் வந்து பாா்த்த போது, கெளசல்யா உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
கல்லூரி விடுதி மாணவி மா்மமான முறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கல்லூரி நிா்வாகம் கூறியுள்ளது. இதுதொடா்பாக ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவி இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து கெளசல்யாவின் பெற்றோா் கூறியது:
தங்களது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. எனது மகள் இறப்பில் மா்மம் உள்ளது. உண்மை நிலவரத்தை காவல் துறையினா் கண்டறிய வேண்டும் என்றனா்.