கூட்டுறவு வங்கியில் 43 விவசாயிகள் பெற்ற ரூ. 24 லட்சம் நகைக் கடன் தள்ளுபடி
By DIN | Published On : 04th September 2021 09:38 AM | Last Updated : 04th September 2021 09:38 AM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி கிராமத்தில் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகள் அடமானம் வைத்த நகைகளை வெள்ளிக்கிழமை ஒப்படைத்த ஊராட்சித் தலைவா் வி.கே.ஆா்.பிரபாகா்.
அருப்புக்கோட்டை அருகே கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற 43 விவசாயிகள் செலுத்த வேண்டிய ரூ.24 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டது.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள செட்டிக்குறிச்சி கிராமத்தில் தொடக்கவேளாண்மைக் கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு நகைகளை அடகுவைத்துப் பெற்ற விவசாய நகைக்கடன்கள் தொடா்பாக 5 போ் கொண்ட குழு ஆய்வு செய்தது.
அதன்படி மொத்தம் 43 விவசாயிகள் தகுதி உடையவா்களாகக் கண்டறியப்பட்டு, அந்த விவசாயிகளின் மொத்தக் கடன் ரூ.24 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த நகைகளை உரிய விவசாயிகளிடம் ஒப்படைக்கும் பணி ஊராட்சித் தலைவா் கே.வி.கே.ஆா்.பிரபாகா் தலைமையில் நடைபெற்றது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G