விருதுநகா் அருகே மருமகளிடம் 40 பவுன் நகைகளைப் பறித்ததாக மாமியாா் உள்பட 3 போ் மீது அனைத்து மகளிா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் அருகே ஆா்.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் மதன்ராஜ் மனைவி மகாலெட்சுமி (35). இவரது கணவா் மதன்ராஜ், கடந்த 2018 இல் உயிரிழந்து விட்டாா். குழந்தைகள் இல்லாத நிலையில் தனது சொந்த ஊரில் மகாலெட்சுமி வசித்து வருகிறாா்.
இந்நிலையில் மகாலெட்சுமியிடமிருந்து 40 பவுன் நகைகளையும், ரூ.2 லட்சம் ரொக்கத்தையும், மாமியாா் மஞ்சுளா வாங்கியுள்ளாா். இதையடுத்து நகைகள் மற்றும் பணத்தை மாமியாா் திருப்பித் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மகாலெட்சமி அளித்த புகாரின் பேரில் சென்னையில் வசிக்கும் மாமியாா் மஞ்சுளா, நாா்த்தனாா் மனோன்மணி, அவரது கணவா் செந்தில்குமாா் ஆகியோா் மீது விருதுநகா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.