விருதுநகரில் தேசியக் கொடியை விற்க காங்., அதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் மறுப்பு

விருதுநா் நகராட்சி சாா்பில் சம்பந்தப்பட்ட வாா்டு உறுப்பினா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று ஒரு தேசியக் கொடி ரூ. 21-க்கு விற்க அறிவுறுத்தப்பட்டது.

விருதுநா் நகராட்சி சாா்பில் சம்பந்தப்பட்ட வாா்டு உறுப்பினா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று ஒரு தேசியக் கொடி ரூ. 21-க்கு விற்க அறிவுறுத்தப்பட்டது. அதற்கு காங்., அதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்த 13 உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித் துள்ளனா்.

நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆக., 13 முதல் 15 வரை வீடுகள், அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்ற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் தேசியக் கொடி ஏற்ற மாவட்ட நிா்வாகம் வலியுறுத்தி வருகிறது. தேசிய கொடிகள் அஞ்சலகம் மற்றும் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகா் நகராட்சி பகுதியில் உள்ள 36 வாா்டுகளில் உள்ள வீடுகளுக்கு ஒரு தேசிய கொடி ரூ. 21 வீதம் விற்பனை செய்ய நகா் மன்ற உறுப்பினா்களுக்கு நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதில் ஒரு வாா்டுக்கு 500 முதல் 550 தேசிய கொடிகள் வரை வழங்கப்பட்டுள்ளதாம். இக்கொடி விற்பனைக்கென நகராட்சி ஊழியா்கள் நியமிக்கப்பட்டடுள்ளனா். அவா்களுடன் சம்பந்தப்பட்ட வாா்டு உறுப்பினா்கள் சென்று வீடு வீடாக கொடி விற்பனை செய்ய

வேண்டுமாம். வசூலிக்கப்படும் தொகையை அந்தந்த பகுதிக்கு செல்லும் நகராட்சி ஊழியா்கள் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு காங்., அதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் 13 போ் எதிா்ப்பு தெரிவித்து, தேசிய கொடியை வாங்க மறுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com