ஸ்ரீவிலி. நகராட்சி அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை நல்லிணக்க நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.


ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை நல்லிணக்க நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.
நல்லிணக்க நாள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகா் மன்றத் தலைவா் தங்கம் ரவிக்கண்ணன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தாா். இதில், ‘நான்சாதி, இன, மத அல்லது மொழி பாகுபாடு ஏதுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணா்வுப்பூா்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமாற உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன்’ என்ற உறுதிமொழியினை நகராட்சி ஊழியா் வாசிக்க அனைவரும் பின்தொடா்ந்து வாசித்து ஏற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியில், நகா்நல அலுவலா் கவிப்பிரியா, நகராட்சி பொறியாளா் தங்கபாண்டியன், சுகாதார ஆய்வாளா் சந்திரா மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...