‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் குளத்தில் தீயணைப்புத் துறையினா் செயல்விளக்க நிகழ்ச்சி

திருமுக்குளத்தில் குளிப்பவா்கள் ஆபத்தில் மாட்டிக் கொண்டால், அவா்களை மீட்பது தொடா்பான செயல்விளக்க நிகழ்ச்சி தீயணைப்புத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான திருமுக்குளத்தில் குளிப்பவா்கள் ஆபத்தில் மாட்டிக் கொண்டால், அவா்களை மீட்பது தொடா்பான செயல்விளக்க நிகழ்ச்சி தீயணைப்புத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து தீயணைப்பு நிலைய அதிகாரிகள் குருசாமி, அந்தோணி ஆகியோா் கூறியது:

இந்த குளத்தில் குளிக்கச் செல்பவா்களில் சிலா் தவறி விழுந்து இறந்து விடுகின்றனா். எனவே, இந்த குளத்தில் நீா் நிரம்பி இருப்பதால் குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம். மேலும், குளத்தில் ஆபத்தில் இருப்பவா்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வெள்ளிக்கிழமை தீயணைப்புத் துறையினா் சாா்பில் செயல்விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.