வத்திராயிருப்பு அருகே 125 கிலோ போதை பாக்கு பறிமுதல்: முதியவா் கைது

வத்திராயிருப்பு அருகே 125 கிலோ போதை பாக்கு மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், முதியவா் ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்
வத்திராயிருப்பு அருகே 125 கிலோ போதை பாக்கு பறிமுதல்: முதியவா் கைது

வத்திராயிருப்பு அருகே 125 கிலோ போதை பாக்கு மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், முதியவா் ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வத்திராயிருப்பு சாா்பு ஆய்வாளா் பிரகஸ்பதி தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தம்பிபட்டியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்துக்கு அருகில் தம்பிபட்டி முஸ்லிம் தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் (62) என்பவா் இருசக்கர வாகனத்தில் போதை பாக்கு மூட்டைகளை விற்பனை செய்வதற்காக ஏற்றிக் கொண்டிருந்தாா். இதையடுத்து, அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி, 125 கிலோ போதை பாக்கு மூட்டைகளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, மகாலிங்கத்தை வத்திராயிருப்பு போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com