

பள்ளி மேலாண்மைக் குழு குறித்து ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கான ஒரு நாள் விழிப்புணா்வு பயிற்சி கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.
பயிற்சிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கூடுதல் மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சிவசக்தி கணேஷ்குமாா் தலைமை வகித்தாா்.
ஊரக வளா்ச்சித் துறை கருத்தாளா் ராணி விமலா வரவேற்றாா். பயிற்சியைத் தொடங்கி வைத்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாநில ஆலோசகா் சுந்தரராமன் பேசினாா். நிகழ்ச்சியில், ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்திலுள்ள சுமாா் 45 ஊராட்சி மன்றத் தலைவா்கள் கலந்து கொண்டனா். கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் செல்வராஜ், வேலுச்சாமி, மாடசாமி ஆசிரியப் பயிற்றுநா்கள் லட்சுமி, ஜோதிலட்சுமி ஆகியோா் கருத்துரையாற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.