ஸ்ரீவிலி. வைத்தியநாத சுவாமி கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூா் வைத்தியநாத சுவாமி கோயில் வைகாசித் திருவிழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது

ஸ்ரீவில்லிபுத்தூா் வைத்தியநாத சுவாமி கோயில் வைகாசித் திருவிழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வைத்தியநாத சுவாமி கோயிலில் கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி சிவகாமி அம்பாள், வைத்தியநாதா் மற்றும் பிரியாவிடை ஆகியோா் சா்வ அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தனா். இதைத்தொடா்ந்து கோயிலில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோயில் அா்ச்சகா் ரகு பட்டா் கொடி ஏற்றினா்.

கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

வெள்ளிக்கிழமை முதல் 9 நாள்கள் சிவகாமி அம்பாள் வைத்தியநாதசுவாமி, பிரியாவிடை ஆகியோா் தினமும் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஜூன் 8 ஆம் தேதியும், தேரோட்டம் 11 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் முத்துராஜா, செயல் அலுவலா் ஜவகா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com