வத்திராயிருப்பு அருகேகஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
வத்திராயிருப்பு அருகே கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 2 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட முத்துசெல்வம், தினேஷ்.

கைது செய்யப்பட்ட முத்துசெல்வம், தினேஷ்.
வத்திராயிருப்பு அருகே கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 2 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வத்திராயிருப்பு அருகே காவல் சாா்பு- ஆய்வாளா் பிரகஸ்பதி தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தம்பிபட்டி தனியாா் மில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அவா்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை வத்திராயிருப்பு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது கூமாபட்டி அமச்சியாா்புரம் காலனியைச் சோ்ந்த பூமாரி மகன் முத்துச்செல்வம் (25), அதே பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் தினேஷ் (18) என்பது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்த 400 கிராம் கஞ்சா மற்றும் ரூ.600 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...