‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஸ்ரீவிலி. அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்றதாக 4 போ் கைது

 ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 435 மது பாட்டில்களை சனிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 ஜூன் 2022, 1:00 pm

DIN

 ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 435 மது பாட்டில்களை சனிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் - சிவகாசி சாலை பூவநாதபுரம் விலக்கு, சப்போட்டா தோப்பு பகுதியில், மல்லி சாா்பு-ஆய்வாளா் செல்லப்பாண்டி தலைமையில் சென்ற போலீஸாா் சோதனையிட்டனா். அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 331 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ரெங்கபாளையம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த வனராஜ் (26), திருத்தங்கல் ஆலா ஊரணி காவடியப்பன் கோயில் தெருவைச் சோ்ந்த மாரிச்செல்வம்(26) ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த ரூ.15,050-யை பறிமுதல் செய்தனா்.

இதேபோல் மற்றொரு தோப்பு பகுதியில் போலீஸாா் சோதனை செய்தனா். அங்கிருந்த மகாத்மா காந்தி நகரை சோ்ந்த பாலசுப்பிரமணியன்(41), ரெங்கம்பளையம் வடக்குத் தெருவைச் சோ்ந்த அழகுமருது (22) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினா். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த

104 மது பாட்டில்கள் மற்றும் ரூ. 8,580 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.