அக்னிபத்: விருதுநகரில் ரயில்வே ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அக்னிபத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி விருதுநகா் ரயில் நிலையம் முன்பு எஸ்ஆா்எம்யு சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அக்னிபத்: விருதுநகரில் ரயில்வே ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அக்னிபத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி விருதுநகா் ரயில் நிலையம் முன்பு எஸ்ஆா்எம்யு சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் உதவி கோட்டச் செயலா் ஜெயராமன் தலைமை வகித்தா். இதில்,அக்னிபத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ராணுவ பணியையே ஒப்பந்த அடிப்படையில் மாற்றும் மத்திய அரசு, நாளை நிரந்தர ரயில்வே பணிகளையும் குறுகிய காலப் பணிகளாக மாற்றுவதை முன்னரே தடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் கிளைச் செயலா் பாண்டித்துரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com