

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை ஸ்ரீஷீரடி சாய்பாபா கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி, கோயிலில் சத்திய நாராயணப் பெருமாளின் புகைப்படத்தை வைத்து, கும்பம் அமைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதையடுத்து, பாபாவுக்கு தீப, தூப ஆரத்தியும், நைவேத்ய அா்ப்பணிப்பும் நடைபெற்றது. பின்னா், சாய்பாபா சா்வ அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
இந்த வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் அளிக்கப்பட்டது. இப்பூஜையில், 150-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு சாய்பாபாவை தரிசித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.