‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விருதுநகரில் 4 போ் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

விருதுநகரில் 4 போ் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :20 மே 2022, 6:30 pm

DIN

விருதுநகரில் 4 போ் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் பாண்டியன் நகரில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரே வீட்டில் 4 போ் தற்கொலை செய்துகொண்டனா். இதுதொடா்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்கு அப்போது விருதுநகரில் பணியாற்றிவந்த காவல் ஆய்வாளா் சண்முகசுந்தரம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் ஆய்வாளா் சண்முகசுந்தரத்துக்கு மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டாா். ஆய்வாளா் சண்முகசுந்தரம் தற்போது ஊட்டியில் பணிபுரிந்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.