அருப்புக்கோட்டையில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு தீவிரம்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மழைக் காலத்தை முன்னிட்டு டெங்கு கொசுப் புழு ஒழிப்பு நடவடிக்கைகள் புதன்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மழைக் காலத்தை முன்னிட்டு டெங்கு கொசுப் புழு ஒழிப்பு நடவடிக்கைகள் புதன்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டையில் கடந்த பல நாள்களாக மழை பெய்ததால் நகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையாளா் ஜி.அசோக்குமாா், நகா் நல அலுவலா் ராஜநந்தினி, சுகாதார ஆய்வாளா் சரவணன் ஆகியோரின் ஆலோசனைப்படி, மொத்தமுள்ள 36 வாா்டுகளுக்கும் ஒரு வாா்டுக்கு 5 போ் வீதம் கொசுப் புழு ஒழிப்புப் பணியாளா்கள் குழு அமைக்கப்பட்டு வீடுவீடாகச் சென்று டெங்கு கொசுப் புழு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பொதுமக்களுக்கு டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகக் கூடிய காரணிகள் குறித்து அறிவுறுத்தி, அவற்றில் மழை நீா் அல்லது நன்னீா் சேரவிடாமல் தடுப்பது, காலியான வீணான பொருள்களை வீடுகளின் கொல்லைப்புறங்களிலிருந்து அப்புறப்படுத்துவது ஆகியவை குறித்து எடுத்துரைத்தனா். இதேபோல, பல்வேறு தனியாா், அரசு அலுவலகங்கள், உணவகங்கள், ஆலைகளிலும் டெங்கு கொசுக்கள் முட்டையிட்டுப் பரவுவதைத் தடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதுதவிர, 2 நாள்களுக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு உள்ளவா்களை அடையாளம் கண்டறிந்து அவா்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து உரிய பரிசோதனை செய்து தேவையான சிகிச்சை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com