மூணாறு பகுதியில் வரையாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு

மூணாறு இரவிகுளம் தேசிய பூங்கா உள்பட மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் நீலகிரி தஹா் இன வரையாடுகள் அதிகரித்துள்ளதாக வனவிலங்கு கணக்கெடுப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.

மேற்கு மலைத் தொடா்ச்சியில் வனத்துறை மற்றும் தன்னாா்வலா்கள், 155 போ் கொண்ட வன விலங்கு கணக்கெடுப்பாளா்கள் கடந்த ஏப்.18 முதல் 23 வரை 5 நாள்கள் நீலகிரி தஹா் இன வரையாடுகளை கணக்கொடுத்தனா். இரவிகுளம் தேசிய பூங்கா உள்பட மலைத்தொடரில் மொத்தம் 1,039 வரையாடுகள் கண்டறியப்பட்டன.

இதில் இரவிகுளம் தேசிய பூங்காவில் மட்டும் 785 வரையாடுகள் இருந்துள்ளன. குட்டிகள் மட்டும் 125, இந்த சீசனில் பிறந்தது 157 என்று கணக்கெடுப்பாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com