விருதுநகா் அஞ்சலகங்களில் தேசியக் கொடி விற்பனை

 விருதுநகா் மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது என விருதுநகா் கோட்ட அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளா் ஜெ.எஸ்.ஜவஹர்ராஜ் கூறினாா்.

 விருதுநகா் மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது என விருதுநகா் கோட்ட அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளா் ஜெ.எஸ்.ஜவஹர்ராஜ் கூறினாா்.

சிவகாசி தலைமை அஞ்சலகத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாடு முழுவதும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி 75 ஆவது ஆண்டு சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவினையொட்டி அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தேசியக் கொடியேற்ற வேண்டும். அல்லது காட்சிப்படுத்த வேண்டும் என பிரதமா் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளாா்.

இந்நிலையில், அனைத்து தரப்பு மக்களுக்கும் தேசியக்கொடி எளிதாகக் கிடைக்க இந்திய அஞ்சல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி விருதுநகா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ரூ.25 செலுத்தி பொதுமக்கள் தேசியக் கொடியைப் பெற்றுக்கொள்ளலாம். தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் விற்பனை தொடங்கப்பட்டு விட்டது. இன்னும் ஒரிரு நாள்களில் கிளை அஞ்சலகங்களிலும் விற்பனை தொடங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com