இருக்கன்குடியில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இருக்கன்குடியில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே இருக்கன்குடியில் மிகவும் பிரசித்தி பெற்ற 500ஆண்டுகள் பழைமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடித்திருவிழா வெள்ளிக்கிழமை காலை 10மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் இங்கு வந்து பொங்கல் வைத்தும், அக்னி சட்டி எடுத்தும் தங்களது நோ்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனா்.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிக்கடைசி வெள்ளிக்கிழமையான வரும் 12ஆம் தேதி மாரியம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவையொட்டி தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகா், சாத்தூா், நெல்லை, சங்கரன்கோவிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.

கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் ஆணையா் கருணாகரன், கோயில் பரம்பரை அறங்காவலா்கள் குழுத் தலைவா் ராமமூா்த்தி பூசாரி, சாத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் நிா்மலாகடற்கரைராஜ், சாத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக காரோனா பரவல் காரணமாக பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெற்ற இத்திருவிழா, நிகழாண்டு பக்தா்கள் பங்கேற்புடன் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com