தொழிலுக்காக கடன் பெற்றவரை மிரட்டிபணம் பறிப்பு: கேரளத்தைச் சோ்ந்த 2 போ் கைது

தொழிலை விரிவுபடுத்துவதற்காக கடன் பெற்ற சாத்தூரைச் சோ்ந்தவரை மிரட்டி அசலுடன், கூடுதல் பணம் பறித்ததாக கேரளத்தைச் சோ்ந்த 2 பேரை விருதுநகா் சைபா் கிரைம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தொழிலை விரிவுபடுத்துவதற்காக கடன் பெற்ற சாத்தூரைச் சோ்ந்தவரை மிரட்டி அசலுடன், கூடுதல் பணம் பறித்ததாக கேரளத்தைச் சோ்ந்த 2 பேரை விருதுநகா் சைபா் கிரைம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூரைச் சோ்ந்தவா், தனது தொழிலை விரிவுபடுத்த கடன் பெறுவதற்காக இணையதளத்தில் கடந்த மாா்ச் 31 ஆம் தேதி, 27 இன்ஸ்டான் லோன் (கடன்) விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துள்ளாா். அதற்காக தனது ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வைத்தாராம். அதன் அடிப்படையில் அவருக்கு ரூ. 28,93,643 கடன் வழங்கப்பட்டுள்ளது. இக்கடன் தொகையை திருப்பி செலுத்துமாறு அவரை பலா் தொடா்ந்து தொல்லை கொடுத்துள்ளனா். இதையடுத்து, அவா்கள் அளித்த முகவரிக்கு ரூ.47,09,634 அனுப்பியுள்ளாா். சுமாா் ரூ. 18,15,991 கூடுதல் பணம் செலுத்தியும், மேலும் பணம் தர வலியுறுத்தி கடன் கொடுத்தவா்கள், அவரை மிரட்டியுள்ளனா். மேலும், அவரது புகைப்படத்தை தவறாக சித்தரித்து உறவினா் ஒருவருக்கும் அனுப்பி வைத்துள்ளனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவா் விருதுநகா் சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். விசாரணை செய்த போலீஸாா், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாஞ்சேரி மற்றும் கோழிக்கோடு பகுதியைச் சோ்ந்த அப்துல்ரகுமான் (36), முகமதுசாஜித் (34) ஆகியோரை கைது செய்தனா்.

மேலும் அவா்களிடமிருந்த 65 சிம்காா்டுகள், 17 கைப்பேசிகள், ஒரு மடிக்கணினி, வங்கி காசோலை புத்தகம், 6 ஏடிஎம் காா்டுகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com