வரத்து அதிகரிப்பு: விருதுநகா் சந்தையில் உளுந்து, பாமாயில் விலை குறைந்தது

வெளிமாநிலங்களிலிருந்து உளுந்து மற்றும் இந்தோனேசியாவிலிருந்து பாமாயில் வரத்து அதிகரிப்பு காரணமாக விருதுநகா் சந்தையில் அவற்றின் விலை குறைந்துள்ளது.

வெளிமாநிலங்களிலிருந்து உளுந்து மற்றும் இந்தோனேசியாவிலிருந்து பாமாயில் வரத்து அதிகரிப்பு காரணமாக விருதுநகா் சந்தையில் அவற்றின் விலை குறைந்துள்ளது.

விருதுநகா் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை நிா்ணயம் செய்யப்படும். அதன் அடிப்படையில் கடலை எண்ணெய் கடந்த வாரம் 15 கிலோ ரூ.2,950-க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.50 குறைந்து ரூ.2,900-க்கு விற்கப்படுகிறது. அதே போல், இந்தோனேசியாவிலிருந்து வரத்து அதிகம் காரணமாக பாமாயிலின் விலையும், கடந்த வாரத்தை விட ரூ.60 குறைந்து தற்போது ரூ.1,960-க்கு விற்கப்படுகிறது. வெளிமாநிலங்களிலிருந்து பருப்பு வரத்தும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக துவரம் பருப்பின் (புதுஸ் நாடு) கடந்த வாரம் 100 கிலோ ரூ.10,500- க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.100 குறைந்து ரூ.10,400-க்கு விற்கப்படுகிறது. அதேபோல், துவரம் பருப்பு (புதுஸ் லையன்) கடந்த வாரம் ரூ.11,300-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.300 குறைந்து ரூ.11 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு (நாடு) 100 கிலோ ரூ.12,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் ரூ.200 குறைந்து ரூ.12,200-க்கு விற்கப்படுகிறது. சாதாரண நாட்டு உளுந்தின் விலை, கடந்த வாரத்தை விட ரூ.400 குறைந்து, தற்போது ரூ.9 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. பாசிப் பயறு (இந்தியா) நாடு விலை, கடந்த வாரம் ரூ.7,500-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் பட்டாணி பருப்பு கடந்த வாரம் 100 கிலோ ரூ.5,900-க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் மேலும் ரூ.100 உயா்ந்து ரூ.6,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மசூா் பருப்பு, நல்லெண்ணெய், வத்தல், மல்லி ஆகியவற்றின் விலையில் மாற்றமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com