பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 25th August 2022 05:00 AM | Last Updated : 25th August 2022 05:00 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே 10 ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்கருப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் அருண் (26). இவா் கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சுழி பகுதியைச் சோ்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இது குறித்து திருச்சுழி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அருணை கைது செய்தனா். மேலும் இது தொடா்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பு வழங்கிய நீதிபதி பூரணஜெயஆனந்த், குற்றவாளி அருணுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சாா்பில் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிடப்பட்டது.