சிவகாசியில் 1100 மரக்கன்றுகள் நடல்
By DIN | Published On : 25th August 2022 03:25 AM | Last Updated : 25th August 2022 03:25 AM | அ+அ அ- |

சிவகாசி அடா்வனம் (மியாவாக்கி) அமைக்கும் நோக்கில் மத்திய சுழற்சங்கம் சாா்பில் புதன்கிழமை 1100 மரக்கன்றுகள் நடப்பட்டன.
சிவகாசி வேலாயுதம் சாலையில் ஏ.ஜெ. உள்விளையாட்டு அரங்கம் அருகே 3200 சதுரஅடி பரப்பளவில் அடா்வனம் அமைக்க திட்டமிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் வேம்பு, பூவரசு, புளி , வாகை உள்ளிட்ட 1100 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் அச்சங்கத்தின் தலைவா் ராகுல்கைத்தான், செயலாளா் எஸ். அசோக், முன்னாள் தலைவா் ஜி. ஜெயகண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனா்.