காரியாபட்டி அருகே தாயால் கடத்தப்பட்ட 2 குழந்தைகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு
By DIN | Published On : 25th August 2022 03:20 AM | Last Updated : 25th August 2022 03:20 AM | அ+அ அ- |

காரியாபட்டி அருகே தாத்தா பராமரிப்பில் இருந்த வந்த குழந்தைகளை அவரது தாய் கடத்தி செல்லப்பட்ட விவகாரத்தில் அந்த இரு குழந்தைகளையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு மீட்டு குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.
விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள வக்கணாங்குண்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் ரத்தினம். இவருக்கும் ஜான்சிராணி என்பவருக்கு திருமணமமாகி முகேஷ் (12), பிருந்தா (10) என இரு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் கடந்த 2020 இல் ரத்தினம் உயிரிழந்து விட்டதால், ஜான்சிராணி உறவினரான அழகா்சாமி என்பவரை மறுமணம் செய்து கொண்டாா். இதையடுத்து ஜான்சிராணியின் குழந்தைகள் தாத்தாவான சுப்பையாவின் பராமரிப்பில் வளா்ந்து வந்தனா். அவா்கள் வக்கணாங்குண்டு பள்ளியில் படித்து வந்தனா். இச்சூழலில் பள்ளிக்குச் சென்ற அக்குழந்தைகளை மா்ம நபா்கள் சிலா் காரில் செவ்வாய்க்கிழமை கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சுப்பையா, தனது பேரன், பேத்தியை தனது மருமகள் ஜான்சிராணி கடத்திச் சென்றுவிட்டதாகப் புகாா் அளித்தாா். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், ஜான்சிராணி யிடம் இருந்து குழந்தைகளை செவ்வாய்க்கிழமை மீட்டனா். பின்னா் அக்குழந்தைகளை விருதுநகா் குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.