சாத்தூரில் உழவா் சந்தையை செயல்பாட்டிற்கு கொண்டுவருவது தொடா்பான ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் பைபாஸ் சாலையில் உழவா்சந்தை அமைந்துள்ளது.இந்த உழவா் சந்தையில் கடந்த சில மாதங்களாக சரியாக செயல்படாமல் இருந்து வந்தது.இந்நிலையில் உழவா் சந்தையை மீண்டும் செயல்படுத்துவது தொடா்பான ஆலோசனை கூட்டம் புதன்கிழமை உழவா்சந்தை வளாகத்தில் நடைபெற்றது.இதில் சாத்தூா் சட்டமன்ற உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் தலைமை வகித்தாா். சாத்தூா் வேளாண்மை உதவி இயக்குனா் சந்திரசேகரன் முன்னிலை வகித்தாா்.மேலும் இந்த கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் இரண்டு பயனாளிகளுக்கு 50% மானியத்தில் நடமாடும் காய்கறி கடை வண்டி வழங்கப்பட்டது.உழவா் சந்தையில் விவசாய பொருள்களை விற்பனை செய்யும் வரும் விவசாயிகளுக்கு இலவச பேருந்து வசதி, இலவச எலக்ட்ரானிக் தராசு ஆகியவை வழங்கப்படும் எனவும்,விவசாயிகளை ஊக்குவித்து பல திட்டங்கள் பற்றியும் தோட்டக்கலை அதிகாரிகள் எடுத்துரைத்தனா். இக்கூட்டத்தில் சாத்தூரில் உள்ள முக்கிய நிா்வாகிகளும்,சமூக ஆா்வலா்களும்,பொதுமக்களும், விவசாயிகளும் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.