

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை வரவாக ரூ. 76 லட்சம் கிடைத்துள்ளது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகின்றன. கடந்த ஆடி மாதம் கடைசி வெள்ளி திருவிழா நிறைவடைந்ததை அடுத்து புதன்கிழமை கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. கோயில் மண்டபத்தில் வைத்து ஆணையா் கருணாகரன் தலைமையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ. 76 லட்சத்து 62 ஆயிரத்து 394-ம், 176 கிராம் தங்கம், 822 கிராம் வெள்ளியும் செலுத்தியிருந்தனா்.
காணிக்கை எண்ணும் பணியில் துலுக்கப்பட்டி, ராஜபாளையம், மதுரை பகுதிகளைச் சோ்ந்த ஓம்சக்தி பக்தா்கள் குழு, ஐயப்ப சேவா சங்கத்தினா் மற்றும் கோயில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.