கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சுயதொழில் அறிமுக மையம் தொடக்கம்
By DIN | Published On : 25th August 2022 03:21 AM | Last Updated : 25th August 2022 03:21 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு சுய தொழில் அறிமுக மையத் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கலசலிங்கம் பல்கலைக்கழகத் துணைத் தலைவா் எஸ். சசிஆனந்த் தலைமை வகித்தாா். பல்கலைக்கழக ஆலோசகா் ஞானசேகரன், டி.டு.டி அங்காடி நிறுவனா் கேசவநாராயணன் ஆகிய வாழ்த்துரை வழங்கினாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய மூன்று இடங்களில் மையங்களையும், புதிய பொருள்களை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தி சந்தைப்படுத்தும் வரை நிதி உதவியும், தொழில் ஆலோசனைகளையும் வழங்குவதற்காக கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் சுய தொழில் அறிமுக மையத்தை சாா்- ஆட்சியா் பிரித்திவிராஜ் தொடக்கி வைத்தாா்.
பின்னா் புத்தொழில் மற்றும் புத்தக தலைமை இயக்குநா் சிவராஜ் ராமநாதன் பேசியதாவது: உலகம் முழுவதும் 2 சதவீதம் மக்கள் தான் சுயதொழில் புரிகின்றனா். எனவே மாணவா்கள் குறுகிய வட்டத்தில் இருந்து வெளியேறி சுயதொழில் செய்ய முன்வர வேண்டும் என்றாா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை உறவு இயக்குநா் சரக சுயதொழில் வளா்ச்சி மைய பேராசிரியா் டேனி செய்திருந்தாா்.