ராஜபாளையத்தில் 200 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

ராஜபாளையத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டி முனிசிபல் காலனியைச் சோ்த்த சுப்புராஜ் என்பவரது மகன் மாரிமுத்து (35). இவா் அப் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் டீ கப் போன்ற பொருள்கள் வியாபாரம் செய்வதாகக் கூறிவிட்டு மறைமுகமாக பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்றவற்றை வாங்கி வந்து ராஜபாளையம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளாா். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடா்ந்து ராஜபாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் பிரீத்தி, வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் ராஜா, சாா்பு- ஆய்வாளா் மூவேந்தன் ஆகியோா் அப்பகுதிக்கு சென்று சோதனையிட்டனா். அப்போது 200 கிலோ குட்கா, புகையிலை பொருள்கள் இருந்தது தெரியவந்தது. போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்னா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com