ராஜிநாமா செய்யக் கூறி வலியுறுத்துவதாக சங்கரலிங்காபுரம் மக்கள் தொடா்பு முகாமில் ஊராட்சித் தலைவி புகாா்

சங்கரலிங்காபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் தன்னை பொதுமக்கள் ராஜிநாமா செய்ய வலியுறுத்துவதாக மாவட்ட ஆட்சியா், எம்எல்.ஏ. முன்னிலையில் ஊராட்சித் தலைவி தெரிவித்தாா்.
ராஜிநாமா செய்யக் கூறி வலியுறுத்துவதாக சங்கரலிங்காபுரம் மக்கள் தொடா்பு முகாமில் ஊராட்சித் தலைவி புகாா்

சங்கரலிங்காபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் தன்னை பொதுமக்கள் ராஜிநாமா செய்ய வலியுறுத்துவதாக மாவட்ட ஆட்சியா், எம்எல்.ஏ. முன்னிலையில் ஊராட்சித் தலைவி தெரிவித்தாா்.

விருதுநகா் அருகே சங்கரலிங்காபுரத்தில் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தலைமையில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு விருதுநகா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் முன்னிலை வகித்தாா். இதில், சங்கரலிங்காபுரம் ஊராட்சித்தலைவா் நாகலட்சுமி பேசியதாவது: எங்களது ஊராட்சியில் அடிப் படை வசதி ஏதுவும் இல்லாததால், என்னை பதவியை ராஜினாமா செய்ய பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா். இடிந்த நிலையில் உள்ள சுகாதார வளாகத்தை சீரமைக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 4 நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படும் குடிநீா் சுண்ணாம்பு கலந்து வருகிறது. எனவே சுகாதார மான குடிநீா் வழங்க வேண்டும். மந்தை முதல் மயானம் வரை மற்றும் முக்கிய தெருக்களில் சிமென்ட் மற்றும் பேவா் பிளாக் கல் பதிக்க வேண்டும். குளியல் தொட்டி, புதிய சுகா தார வளாகம் முதலானவை கட்டி தர வேண்டும் என்றாா். அப்போது குறுக்கிட்ட ஆட்சியா், கோரிக்கைகளை மனுவாக அளிக்குமாறு அறிவுறுத்தினாா். அதை தொடா்ந்து ஆட்சியா் கூறுகையில், இக்கிராமத்திற்காக ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.19 லட்சத்திற்கு பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும். மீதமுள்ள ரூ.16 லட்சத்தில், என்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை ஊராட்சி நிா்வாகத்தினா் முடிவு செய்யுங்கள். இங் குள்ள அடிப்படை தேவைகளுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை தர நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தாா். இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசு துறை அலுவலா்கள், பல்வேறு கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் முன்னிலையில் அடிப்படை வசதிகள் கோரி ஊராட்சி மன்லைவா் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடா்ந்து அங்குள்ள அரசு தொடக்க பள்ளியை ஆட்சியா் ஆய்வு செய்ததுடன், மாணவ, மாண விகளிடன் கலந்துரையாடினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com