இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் வருவாய் ரூ.36 லட்சம்
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.36 லட்சம் கிடைத்தது.
இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். இதுபோல, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆணையா் மற்றும் செயல் அலுவலா் சுரேஷ், இருக்கன்குடி கோயில் ஆணையா் கருணாகரன், பரம்பரை அறங்காவலா்கள், ஆய்வாளா்கள், வங்கி ஊழியா்கள் ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டன.
கோயில் மண்டபத்தில் காணிக்கைளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், துலுக்கப்பட்டி, ராஜபாளையம், மதுரை ஆகிய ஊா்களைச் சோ்ந்த ஓம் சக்தி பக்தா்கள் குழு, ஐயப்ப சேவா சங்கம் மற்றும் கோயில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.
முடிவில், ரொக்க காணிக்கையாக ரூ.36 லட்சத்து 26 ஆயிரத்து 919 கிடைத்தது. தங்கம் 175 கிராமும் வெள்ளி 395 கிராமும் கிடைத்ததாக கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா்.