இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 11th December 2022 12:00 AM | Last Updated : 11th December 2022 12:00 AM | அ+அ அ- |

இருக்கன்குடி அணை வழியாக மாரியம்மன் கோயிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வாகன ஓட்டுநா்கள், பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே இருக்கன்குடியில் பழைமையான மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் வைப்பாறும், அா்ச்சுனா நதியும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் நீா்த்தேக்கமும் உள்ளது.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு செல்லும் வாகனங்கள் நீா்த்தேக்கத்தின் அருகே, பொதுப்பணித் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள சாலையை பயன்படுத்தி வருகின்றனா். இந்தச் சாலை கற்கள் பெயா்ந்து மிக மோசமான நிலையில் உள்ளது.
திருவிழா நாள்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இதனால், வெளியூா்களிலிருந்து வாகனங்களில் வரும் பக்தா்கள் இந்த பாதை வழியாகத் தான் செல்ல வேண்டும். இந்தச் சாலையை சீரமைக்க பொதுப் பணித்துறையினா் முன்வர வேண்டும் என்பது பக்தா்களின் கோரிக்கையாக உள்ளது.