ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கலசலிங்கம் பாா்மஸி கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு கல்லூரி செயலாளா் எஸ்.சசி ஆனந்த் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் நா. வெங்கடேசன் வரவேற்றாா்.
இந்த விழாவில், வத்திராயிருப்பு அரசு மருத்துமனை தலைமை மருத்துவா் வி.பாலகிருஷ்ணன், சிவகாசி இஎஸ்ஐ மருத்துவமனை மயக்கவியல் நிபுணா் எம். ஜெகநாத் பிரபு ஆகியோா் மருந்தியல் துறையின் எதிா்காலம் குறித்து பேசினா்.
கலசலிங்கம் பல்கலை. பதிவாளா் வி. வாசுதேவன், கலசலிங்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் சேவியா் செல்வா சுரேஷ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
இந்த விழாவில், கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரிக்கும் , மெட் பிளஸ், அரவிந்த் ஹொ்பல் நிறுவனங்களுக்குமிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அரவிந்த் ஹொ்பல் லேப் நிா்வாக இயக்குநா் எஸ்.ஏ. பரத்ராஜ், மெட் பிளஸின் முதுநிலை மேலாளா் எல். வெங்கட்ரெட்டி ஆகியோா் கலந்து கொண்டனா்.