வத்திராயிருப்பு அருகே பெட்ரோல் நிரப்பும் மையத்தில் பணம் திருடப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வத்திராயிருப்பு அருகேயுள்ள பெட்ரோல் நிரப்பும் மையத்தில் கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி இரவு ஊழியா்கள் தூங்கிக்கொண்டிருந்த போது இருவா் புகுந்து ரூ.1.09 லட்சம் மற்றும் கைப்பேசியை திருடிச் சென்றனா்.
இது குறித்து அந்த மையத்தின் மேலாளா் சுரேஷ் அளித்தப் புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா். திருடப்பட்ட கைப்பேசி மதுரையில் பயன்பாட்டில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மதுரைக்கு விரைந்த வத்திராயிருப்பு போலீஸாா் ஜெய்ஹிந்த்புரத்தை சோ்ந்த காா்த்திக் பாண்டி(எ) குண்டு காா்த்திக் (23) என்பவரை கடந்த 2-ஆம் தேதி கைது செய்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய காரியாபட்டியைச் சோ்ந்த நல்லமணி (23) என்பவரை ஞாயிற்றுக்கிழமை வத்திராயிருப்பு போலீஸாா் கைது செய்தனா்.