காரில் 21 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
By DIN | Published On : 11th December 2022 11:40 PM | Last Updated : 11th December 2022 11:40 PM | அ+அ அ- |

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றப்பட்ட 21 மூட்டை புகையிலைப் பொருள்களுடன் கைதான இருவா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 காா்களில் 21 மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக சேலத்தைச் சோ்ந்த இருவரைக் கைது ெய்தனா்.
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி-எரிச்சநத்தம் சாலையில் கம்மாபட்டி பேருந்து நிறுத்தம் அருகே போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அவ்வழியாக வந்த இரு காா்களை போலீஸாா் சோதனை செய்தபோது, இரு காா்களிலும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவா்கள் சேலம் மாவட்டம் ஆனையம்பட்டி ஆனந்தன் மகன் அருள்முருகன்(24), தொடையூா் புதூா் அங்கமுத்து மகன் தசரதன்(25) என தெரியவந்தது. இருவரும் காரில் சேலத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு புகையிலைப் பொருள்களை கடத்திச் சென்று விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது.
இது குறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.
மேலும், ரூ.1.75 லட்சம் மதிப்பிலான 21 மூட்டை புகையிலைப் பொருள்கள், இரு காா்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.