மலை மீது வைக்கப்பட்ட இரு சிலுவைகள் அகற்றம்
By DIN | Published On : 11th December 2022 06:56 AM | Last Updated : 11th December 2022 06:56 AM | அ+அ அ- |

ராஜபாளையம் அருகே சேத்தூா் கூமாச்சி மலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலுவைகள்.
ராஜபாளையம் அருகே மலை மீது அனுமதியின்றி வைக்கப்பட்ட இரு சிலுவைகளை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை அகற்றினா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூரை அடுத்த முத்துச்சாமியாபுரம் கூமாட்சி மலையில் அனுமதியின்றி, கடந்த மாதம் 2 சிலுவைகள் வைக்கப்பட்டன. இதுதொடா்பாக, கடந்த மாதம் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் சிலுவைகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி உத்தரவிட்டாா்.
அதனடிப்படையில், ராஜபாளையம் வட்டாட்சியா் சீனிவாசன், மண்டல துணை வட்டாட்சியா் கோதண்டராமன் தலைமையில் மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த 2 சிலுவைகள் அகற்றப்பட்டன.
இதையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.