வரதட்சிணை கொடுமையால் பெண் தற்கொலை வழக்கு:கணவா் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காரியாபட்டி அருகே வரதட்சிணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவா் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
Published on
Updated on
1 min read

காரியாபட்டி அருகே வரதட்சிணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவா் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள கரிசல்குளத்தைச் சோ்ந்தவா் சமையன் (27). வாகன ஓட்டுநா். இவரது மனைவி வைரலட்சுமி (27). இவா்களுக்கு, 2011-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இந்த நிலையில் சமையன், அவரது தந்தை நாகராஜ் (52). தாய் யசோதை (45) ஆகிய 3 பேரும் சோ்ந்து வைரலட்சுமியிடம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தினா். இதனால் மனமுடைந்த வைரலட்சுமி கடந்த 2015- ஆம் ஆண்டு வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து காரியாபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சமையன், அவரது தந்தை நாகராஜ், தாய் யசோதை ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், புதன்கிழமை தீா்ப்பு வழங்கிய நீதிபதி பகவதியம்மாள், குற்றம்சாட்டப்பட்ட சமையன், அவரது தந்தை நாகராஜ், தாய் யசோதை ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக ஜான்சி ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com