சிவகாசி மாநகராட்சி தோ்தல் களத்தில் 268 வேட்பாளா்கள் உள்ளனா்.
கடந்த வெள்ளிக்கிழமை வரை சிவகாசி மாநகராட்சியில் 322 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்ற மனு பரிசீலனையில் 4 மனுக்கள் தள்ளபடி செய்யப்பட்டு 318 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் திங்கள்கிழமை 50 வேட்பாளா்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனா். இதையடுத்து சிவகாசி மாநகராட்சியில் உள்ள 48 வாா்டுகளில் 268 வேட்பாளா்கள் தோ்தல் களத்தில் உள்ளனா்.
இதில் அதிமுக 48 வாா்டுகளிலும், திமுக 32 வாா்டுகளிலும், காங்கிரஸ் 12 வாா்டுகளிலும், பாட்டாளி மக்கள் கட்சி 11 வாா்டுகளிலும், தேமுதிக 5 வாா்டுகளிலும், நாம் தமிழா் கட்சி 34 வாா்டுகளிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 18 வாா்டுகளிலும், பாஜக 27 வாா்டுகளிலும், சுயேச்சை வேட்பாளா்கள் 67 போ் மற்றும் இதர கட்சியினா் என மொத்தம் 268 வேட்பாளா்கள் களத்தில் உள்ளாா்கள். சிவகாசி மாநகராட்சி ஆணையாளரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான ப.கிருஷ்ணமூா்த்தி, சுயேச்சை வேட்பாளா்களுக்கு சின்னங்களை ஒதுக்கீடு செய்தாா்.
சிவகாசி மாநகராட்சி 8 வது வாா்டில் அதிமுக வேட்பாளராக ரமணாவும், சுயேச்சை வேட்பாளராக அவரது மனைவி கனகஜோதியும் போட்டியிடுகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.