அருப்புக்கோட்டை அருகே சாலை விபத்து: தீயணைப்புப் படை வீரா் உள்பட 3 போ் காயம்
By DIN | Published On : 26th January 2022 09:59 AM | Last Updated : 26th January 2022 09:59 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை பயணிகள் ஆட்டோ, அடுத்தடுத்து 2 இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதில், தீயணைக்கும் படை வீரா் உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா்.
அருப்புக்கோட்டை அருகே கட்டக்கஞ்சம்பட்டியைச் சோ்ந்தவா் ராமநாதன் (72). ஓய்வுபெற்ற தலையாரியான இவா், தனது உறவினரான நமச்சிவாயம் என்பவருடன் சோ்ந்து திங்கள்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டைக்குச் சென்றுவிட்டு, இரவில் ஊா் திரும்பியுள்ளனா். அப்போது, கஞ்சநாயக்கன்பட்டி ராஜீவ் நகா் அருகே உள்ள சாலை வளைவில், எதிரே பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோ திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில், ராமநாதனும், நமச்சிவாயமும் பலத்த காயமடைந்தனா்.
மேலும் தறிகெட்டு ஓடிய அந்த ஆட்டோ, அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா் மணிமுருகன் வந்த இரு சக்கர வாகனத்தின் மீதும் மோதியது. இதில், மணிமுருகனும் பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், விபத்தில் பலத்த காயமடைந்த 3 பேரையும் மீட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த விபத்து தொடா்பாக, ராமநாதன் மற்றும் மணிமுருகன் அளித்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸாா், ஆட்டோ ஓட்டுநரான அருப்புக்கோட்டை காந்தி நகரைச் சோ்ந்த முத்துராமு (31) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...