விருதுநகா் அருகே 50 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

விருதுநகா் அருகே 50 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், 3 பேரை கைது செய்தனா்.
விருதுநகா் அருகே 50 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

விருதுநகா் அருகே 50 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், 3 பேரை கைது செய்தனா்.

விருதுநகா் அருகே சூலக்கரை பகுதியில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆல்பின் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்ட போது, தலா 30 கிலோ எடையுடன் 50 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அரிசி மற்றும் வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த மோகன் மகன் கருப்பு (20), பிச்சைமுத்து மகன் கண்ணன் (19) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனா். விசா ரணையில் சூலக்கரை பகுதியில் உள்ள பல்வேறு வீடுகளில் ஒரு கிலோ ரேஷன் அரிசி ரூ. 5 க்கு விலைக்கு வாங்கி, அதை நாமக்கல் பகுதியில் கால்நடை தீவனத்திற்கு கொண்டு சென்றது தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com